முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 6 மாதத்தில் 138 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 6 மாதங்களில் 138 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

Updated On : 15 செப்டம்பர், 2020 at 6:10 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 6 மாதங்களில் 138 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து மக்களவைவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி கூறுகையில், ஜம்மு காஷ்மீர் கடந்த 30 ஆண்டுகளாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ச்சியாக மத்திய அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

Advertisement

இதன் விளைவாக கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 138 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் போது, 50 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

மேலும், இந்தியாவிற்குள் கடந்த 6 மாதத்தில் 176 ஊடுருவும் முயற்சி நடைபெற்றது. இதில், 111 முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.