தற்போதைய செய்திகள்

ஓமன் நாட்டில் இந்திய செவிலியர் கரோனாவால் பலி

PTI

ஓமனில் இந்திய செவிலியர் ஒருவர் கரோனாவால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பிளெஸி தாமஸ் (வயது 37) ஓமனில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட பிளெஸி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி பிளெஸி செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக ஓமன் சுகாதாரத்துறை தெரிவித்தது. மேலும், ஓமன் நாட்டு சுகாதாரத்துறை மற்றும் சுகாதராப் பணியாளர்கள் சார்பில் பிளெஸிக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஓமன் நாட்டில் உயிரிழக்கும் முதல் சுகாதரத்துறை ஊழியர் பிளெஸி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT