மகாராஷ்டிரத்தில் புதிதாக 21,656 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 21,656 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:52 PM
மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 21,656 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 21,356 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 11,67,496 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 405 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 31,791 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 22,078 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் 8,34,432 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 3,00,887 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.