விபத்துக்குள்ளான டிபி-20 ரக பயிற்சி விமானம் 
தற்போதைய செய்திகள்

உ.பி.யில் பயிற்சி விமானம் விபத்து : ஒருவர் பலி

உத்தரபிரதேசத்தின் அசாம்கர் மாவட்டத்தில் பயிற்சி நிறுவனத்தின் விமானம் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ANI

உத்தரபிரதேசத்தின் அசாம்கர் மாவட்டத்தில் பயிற்சி நிறுவனத்தின் விமானம் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் அமேதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி ராஷ்டிரிய உதான் அகாடமி மையத்தைச் சேர்ந்த பறக்கும் பயிற்சி நிறுவனத்திற்கு சொந்தமான டிபி-20 ரக பயிற்சி விமானத்தை ஹரியாணாவைச் சேர்ந்த கொங்கர்க் சரண் என்ற விமானி இயக்கியுள்ளார்.

இந்த விமானமானது, அசாம்கர் மாவட்டத்தின் குஷ்வாபுரவா கிராமத்திற்கு அருகே இன்று காலை 11.20 மணியளவில்  சென்ற போது திடீரென்று தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், விமானி உயிரிழந்தார். மேலும், விமானத்தில் பயணம் 3 பேர் வெளியே குதித்து உயிர் தப்பியதாக தெரிவித்தனர்.

மேலும் விபத்து நடந்ததைக் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT