முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆப்கனில் 13 தலிபான்கள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 தலிபான்கள் கொல்லப்பட்டதாக வியாழக்கிழமை தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:25 PM
கோப்புப்படம்
பகிர்:

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 தலிபான்கள் கொல்லப்பட்டதாக வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து பாதுகாப்புப்படை அதிகாரி ஷாப்பூர் அஹமட்ஸாய் கூறுகையில்,

ஆப்கானிஸ்தான் கிழக்கு லோகர் மாகாணத்தின் கர்வார் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன் தலிபான்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் காவல்துறை வீரர்கள் இணைந்து புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் 13 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு காயம் ஏற்படவில்லை.

இந்த தாக்குதலானது, தலிபான்களை அப்பகுதியில் இருந்து அகற்றும் வரை நடைபெறும் என தெரிவித்தார்.

இதுகுறித்து தலிபான்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்த கருத்தும் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.