முகப்பு
தற்போதைய செய்திகள்

நேபாளத்தில் நிலச்சரிவு : ஒரே குடும்பத்தில் 9 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தனர்.

Updated On : 24 செப்டம்பர், 2020 at 3:37 PM
கோப்புப்படம்
பகிர்:

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தனர்.

நேபாளம் சியாங்ஜா மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து சியாங்ஜா மாவட்ட அதிகாரி கங்கா செத்ரி கூறுகையில்,

Advertisement

இந்த நிலச்சரிவு நடந்த இடத்தில் இருந்து இதுவரை 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அதில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.