கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

பழங்குடியின சிறுமிகள் 3 பேர் நீரில் மூழ்கி பலி

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சிறுமிகள் 3 பேர் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

UNI

ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சிறுமிகள் 3 பேர் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜார்கண்டின் கோடா மாவட்டத்தில் உள்ள குமார்டோய் கிராமத்தில் 2 சிறுவர்கள், 3 சிறுமிகள் உள்ளிட்ட 5 குழந்தைகள் அங்குள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது 3 சிறுமிகள் ஆழமான நீர் பகுதியில் சிக்கி மூழ்கியுள்ளனர். இதைக் கண்ட சிறுவர்கள் உடனடியாக கிராம மக்களிடம் தெரிவித்தனர்.

இருப்பினும், கிராமவாசிகள் மீட்பதற்குள் சிறுமிகள் சோதி குமாரி (11), நந்தினி குமாரி (9), ஆஷா குமாரி (10) ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT