முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவா காவல்துறை தலைவருக்கு கரோனா

கோவா காவல்துறை தலைவர் முகேஷ் குமார் மீனாவிற்கு திங்கள்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 செப்டம்பர், 2020 at 6:34 PM
கோவா காவல்துறை தலைவர் முகேஷ் குமார் மீனா
பகிர்:

கோவா காவல்துறை தலைவர் முகேஷ் குமார் மீனாவிற்கு திங்கள்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து அவர் அனுமதிக்கப்பட்ட மணிப்பால் மருத்துவமனை கூறுகையில்,

கோவா காவல்துறை தலைவர் முகேஷ் லேசான காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. 

Advertisement

மேலும், அவரின் உடல் சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவார் என தெரிவித்தனர்.

முகேஷ் கடந்த ஜூலை மாதம் தான் கோவா காவல்துறை தலைவராக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கோவாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,958 ஆக உள்ளது, பலி எண்ணிக்கை 401 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.