தற்போதைய செய்திகள்

சிம்லாவில் கூடைப்பந்து விளையாடும்போது சிறுவன் உயிரிழப்பு

DIN

சிம்லாவில் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென்று மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்துள்ளார்.

சிம்லாவின் ஆக்லாந்து பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுவன் இன்று கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று மைதானத்தில் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து சிம்லாவில் உள்ள ஐ.ஜி.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

அந்தச் சிறுவனுக்கு கரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் தொற்று இல்லை என தெரியவந்தது. அவர் அதிக எடை கொண்டவர் என்பதால் இருதய பிரச்னையால் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

8 முதல் 12 வகுப்பு வரை அனைத்து பள்ளிகளையும் செப்டம்பர் 21 ஆம் தேதி திறக்க மாநில அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT