தமிழகத்தில் மேலும் 1,132 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 1,132 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,132 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,01,161 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 359 பேருக்கும், கோவையில் 117 பேருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 10 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,919 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,79,291 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 9,951 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.