மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!
மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தகவலின்படி,
அண்டை மாவட்டங்களான நாந்தேட் மற்றும் பர்பானி ஆகியவற்றின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
ஹிங்கோலி மாவட்டத்தின் பாங்ரா ஷிண்டே கிராமத்தில் உள்ள சில வீடுகள் மற்றும் சமுதாயக் கூடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாக, ஹிங்கோலி மாவட்ட ஆட்சியர் ராகுல் குப்தா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கமானது காலை 8.45 மணியளவில் 4.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி, ஹிங்கோலி மாவட்டத்தின் வாஸ்மத் தாலுகாவில் உள்ள ஷிர்லி கிராமத்திற்கு அடியில், தரைமட்டத்திலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.
அண்டை நகரமான நாந்தேட், அதன் கிராமப்புறப் பகுதிகள், அர்தாப்பூர், ஹட்கான் மற்றும் ஹிமாயத்நகர் ஆகிய தாலுகாக்கள் பர்பானி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. கட்டடங்களில் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
An earthquake of 4.7 magnitude struck parts of Hingoli district in Marathwada region of Maharashtra on Saturday morning, while tremors were also felt in parts of neighbouring Nanded and Parbhani districts, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.