தமிழகத்தில் மேலும் 1,174 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 1,174 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,174 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,03,516 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 342 பேருக்கும், கோவையில் 120 பேருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 11 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,942 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,214 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,81,745 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 9,829 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.