முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் வீச்சு

கோவை சுந்தராபுரம் பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அங்கிருந்த பெரியார் சிலை மீது காவி பெயிண்ட்  வீசி சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. 

தற்போதைய செய்திகள்

கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் வீச்சு

கோவை சுந்தராபுரம் பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அங்கிருந்த பெரியார் சிலை மீது காவி பெயிண்ட்  வீசி சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது  நள்ளிரவு மர்ம நபர்கள் காவி பெயிண்ட்  வீசி சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. தகவல் அறிந்து திமுக மற்றும் திராவிடர் கழகத்தினர் மற்றும் பெரியார் அமைப்பினர் அந்த பகுதியில் குவிந்து வருவதால் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பெரியார் சிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் காவி பெயிண்ட்டை ஊற்றி சென்றுள்ளனர். இதனை காலை 5.30 மணியளவில் கண்ட பெரியார் அமைப்பினர் மற்றும் திமுகவினர் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து வந்த குனியமுத்தூர் காவலர்கள் தண்ணீர் ஊற்றி பெயிண்டுகளை அகற்றினர். 

இந்நிலையில், பெரியார் சிலை மீது பெயிண்ட்டை ஊற்றிச் சென்ற மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி திமுக, மற்றும் பெரியார் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் அங்கு வந்த மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் மற்றும் தெற்கு உதவி ஆணையர் செட்டிக் மனுவேல் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கூட்டத்தை கலைத்தனர். 

இதையடுத்து பெரியார் சிலைக்கு காவலர்கள் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே சுந்தராபுரம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை காவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி பெயிண்ட் ஊற்றி சென்ற சம்பவத்திற்கு சிங்காநல்லூர் திமுக எம்.எல்.ஏ கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதனை கண்டித்து கோவை காந்திபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, திமுக கட்சிகள் அறிவித்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →