முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் மேலும் 4,132 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,132 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 13 நவம்பர், 2020 at 9:38 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:22 PM

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,132 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் புதிதாக 4,132 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,40,461 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,543 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 127 பேர் பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 45,809 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 16,09,607 பேர் குணமடைந்துள்ளனர். 84,082 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.