தில்லியில் மேலும் 2,871 பேருக்கு கரோனா
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,871 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:04 PM
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,871 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 2,871 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 2,98,107 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 35 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 5,616 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தொற்றில் இருந்து 3,370 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 2,70,305 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 22,186 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.