கேரளம், அசாம், மேற்குவங்கத்தின் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்
கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. மதியம் 1 மணி நிலவரப்படி 3 மாநிலங்களிலும் ஏறக்குறைய 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. மதியம் 1 மணி நிலவரப்படி 3 மாநிலங்களிலும் ஏறக்குறைய 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கேரளம்:
கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகின்றது. மதியம் 1 மணி நிலவரப்படி, 47.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அசாம்:
அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் இறுதி கட்டத்தில் 1 மணி நிலவரப்படி 53.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்குவங்கம்:
மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் 3ஆம் கட்டத்தில் 1 மணி நிலவரப்படி 53.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.