தமிழகத்தில் 234 தொகுதிகளில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை நடைபெற்றது.
இன்று மாலை 7 மணிவரை 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மொத்தம் பதிவான வாக்குகளின் சரியான சதவீதம் நள்ளிரவு 1 மணியளவில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.