மகாராஷ்டிரத்தில் 9, 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி
மகாராஷ்டிர மாநிலத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.
எனினும் கரோனா தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு சரிவர நடைபெறாத காரணத்தால் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக மகாராஷ்டிர மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் சனிக்கிழமை அறிவித்தார்.
இதற்குமுன் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.