தற்போதைய செய்திகள்

கரோனா அச்சம்: மும்பையிலிருந்து வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

ANI

கரோனா தொற்று திடீரென அதிகரித்ததையடுத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தோடு மும்பையைவிட்டு வெளியேறி வருகின்றனர். 

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதித்து வருகின்றனர். 

அதன்படி, மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கபட்டுவிடுமோ என்று அச்சத்தால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். 

அதிலும், மிகவும் பாதிக்கப்பட்ட மும்பையில் உள்ள லோக்மானிய திலக் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று காலை முதல் குவிந்து வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

குர்லாவில் உள்ள லோக்மானிய திலக் முனையத்தில் ஏற்பட்டுள்ள கூட்டம் வழக்கமான கோடைக்காலத்தில் ஏற்படக் கூடியவை தான். இன்று மொத்தம் 23 ரயில்கள் இங்கிருந்து புறப்படுகிறது. அதில், 16 ரயில்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு செல்கின்றன எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT