தற்போதைய செய்திகள்

பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை: தில்லி முதல்வர் கோரிக்கை

ANI

பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கவேண்டும் என மத்திய அரசிற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக கருதி கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தில்லி முதல்வர் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தில்லி முதல்வர் கூறியதாவது,

பத்திரிகையாளர்கள் கரோனா பரவலுக்கு மத்தியில் பணி செய்து வருகிறார்கள். அவர்களை முன்களப் பணியாளர்களாக கருதி தடுப்பூசியில் முன்னிரிமை வழங்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT