முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி தேவை: மத்திய அரசுக்கு கடிதம்

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி கேட்டு மத்திய அரசிற்கு தமிழக அரசு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
தலைமைச் செயலகம்
பகிர்:

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி கேட்டு மத்திய அரசிற்கு தமிழக அரசு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு வேகப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்ட் மற்றும் 5 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் கேட்டு தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜன.16 முதல் முன்களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →