வெளியிலிருந்து வரும் பாஜகவினரால் தான் கரோனா அதிகரிப்பு: மம்தா குற்றச்சாட்டு
வெளி மாநிலங்களிலிருந்து கரோனா பரிசோதனை செய்யாமல் வரும் பாஜகவினரால் தான் மேற்குவங்கத்தில் கரோனா அதிகரித்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
வெளி மாநிலங்களிலிருந்து கரோனா பரிசோதனை செய்யாமல் வரும் பாஜகவினரால் தான் மேற்குவங்கத்தில் கரோனா அதிகரித்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், மேற்கு வங்கத்தில் மட்டும் நாள்தோறும் 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நோபாரா பிரசாரத்தில் மம்தா பேசியது,
தேர்தல் பிரசாரத்திற்காக வெளி மாநிலங்களிலிருந்து பரிசோதனை செய்யாமல் பாஜகவினரை அழைத்து வந்ததால், கடந்த 5 மாதங்களாக இல்லாத கரோனா தொற்று தற்போது அதிகரித்துள்ளது.
வெளியில் இருந்து வருபவர்கள் பரப்பும் கரோனாவால் எங்கள் மக்கள் பலியானால், அதற்கும் எங்களை குறை கூறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.