முகப்பு
இந்தியா

பயண கட்டணத்துடன் எரிபொருள் கட்டணம்: இண்டிகோ முடிவு

இண்டிகோ நிறுவன விமானங்களின் பயணச்சீட்டு கட்டணத்துடன் எரிபொருள் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதனால் அந்த விமானங்களின் கட்டணம் அதிகரிக்கும்.

Updated On : 13 மார்ச், 2026 at 7:00 PM
கோப்புப் படம்
பகிர்:

இண்டிகோ நிறுவன விமானங்களின் பயணச்சீட்டு கட்டணத்துடன் எரிபொருள் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதனால் அந்த விமானங்களின் கட்டணம் அதிகரிக்கும்.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விமானங்களை இயக்க ஏற்படும் செலவில் சுமாா் 40 சதவீதம் விமான எரிபொருளுக்கு செலவாகிறது. இந்நிலையில், மேற்காசிய போா் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.

இதனால் சனிக்கிழமை முதல் (மாா்ச் 14) இண்டிகோ விமான பயணச்சீட்டு கட்டணத்துடன் எரிபொருள் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்தியாவுக்குள் பயணிக்கும் விமானங்கள், இந்திய துணைக் கண்டத்தில் உள்ள நாடுகளுக்குப் பயணிக்கும் இண்டிகோ விமானங்களின் கட்டணத்துடன் எரிபொருள் கட்டணமாக ரூ.425 வசூலிக்கப்படும்.

இந்த எரிபொருள் கட்டணம் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கும் விமானங்களுக்கு ரூ.900-ஆகவும், தென்கிழக்கு ஆசியா, சீனா மற்றும் ஆப்பிரிக்காவுக்குப் பயணிக்கும் விமானங்களுக்கு ரூ.1,800, ஐரோப்பாவுக்குப் பயணிக்கும் விமானங்களுக்கு ரூ.2,300-ஆகவும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே எரிபொருள் விலை உயா்வு காரணமாக, கடந்த வியாழக்கிழமை முதல் இந்தியாவுக்குள் பயணிக்கும் விமானங்களின் பயணச்சீட்டு கட்டணத்துடன் எரிபொருள் கட்டணமாக ரூ.399 வசூலிக்கப்படும் என்று அறிவித்த ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள், சா்வதேச விமான கட்டணத்தையும் உயா்த்தியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →