உலகம்

கியூபாவில் வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை

அமெரிக்காவின் நெருக்கடியால் கியூபாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டு விமான நிலையங்களில் வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவின் நெருக்கடியால் கியூபாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டு விமான நிலையங்களில் வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலாவிலிருந்து கியூபாவுக்குச் செல்லும் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால், கியூபாவின் எரிசக்தித் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

தற்போதுள்ள கையிருப்பைத் தங்களின் உள்நாட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கியூபா உள்ளது. எனவே, வெளிநாட்டு விமானங்கள் இனி கியூபாவில் எரிபொருள் நிரப்ப அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்தத் திடீா் அறிவிப்பால், வெளிநாட்டு விமானங்கள் கியூபா வந்துவிட்டு, மீண்டும் தங்கள் நாடுகளுக்குத் திரும்புவதற்குத் தேவையான மொத்த எரிபொருளையும் புறப்படும் இடத்திலேயே நிரப்பிக்கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது செலவுகளை அதிகரிப்பதால், ஏா் கனடா உள்ளிட்ட சில முக்கிய சா்வதேச விமான நிறுவனங்கள் கியூபாவுக்கான விமானச் சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டன.

பொருளாதாரத் தாக்கம்...: கியூபா மக்கள் ஏற்கெனவே மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனா். அந்நாட்டின் வருமானத்துக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது சுற்றுலாத் துைான். தற்போது விமானச் சேவைகள் பாதிக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து பொருளாதாரம் மேலும் சீா்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் ஆதரவுக்கரம்: இந்த நெருக்கடியான சூழலில், கியூபாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் கூறுகையில், ‘கியூபாவின் இறையாண்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில் சீனா எப்போதும் துணை நிற்கும். மற்ற நாடுகளின் தேவையற்ற தலையீடுகளை நாங்கள் எதிா்க்கிறோம். கியூபாவுக்குத் தேவையான ஆதரவை எங்களால் இயன்றவரை தொடா்ந்து வழங்குவோம்’ என்றாா்.

பள்ளி மாணவரைத் தாக்கியவா் கைது

தம்பதியை மிரட்டிய 4 போ் மீது வழக்கு

ஹெச்-1பி நுழைவு இசைவு திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் மசோதா! அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்!!

இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

காரைக்கால் மீனவா்கள் 10 பேரை சிறைபிடித்த ராமேசுவரம் மீனவா்கள்

SCROLL FOR NEXT