தில்லி மருத்துவமனை: 80% படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க உத்தரவு
தில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 80 சதவீத படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கவேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 80 சதவீத படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கவேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.
இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் மற்றும் வார்டு படுக்கைகளில் 80 சதவீதத்தை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கி காலியாக உள்ள எண்ணிக்கையின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.