முகப்பு
தற்போதைய செய்திகள்

தெலங்கானாவில் 6 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு

தெலங்கானா மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
தெலங்கானாவில் மேலும் 6,542 பேருக்கு கரோனா
பகிர்:

தெலங்கானா மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,542 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 2,887 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

இதுவரை தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,67,901 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,19,537 ஆகவும் உயர்ந்துள்ளது. 

மேலும் ஒரேநாளில் 20 பேர் பலியாகியுள்ள நிலையில், நாட்டில் இதுவரை 1,876 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. தொற்று பாதித்து 46,488 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.