கௌசல்யா 
தற்போதைய செய்திகள்

திருச்சியில் பெண் காவலர் தற்கொலை: காவல்துறை விசாரணை

திருச்சியில் பெண்காவலர் ஒருவர் எலி விஷத்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

DIN

திருச்சியில் பெண்காவலர் ஒருவர் எலி விஷத்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகள் கௌசல்யா (23). கடந்த 2017 ஆம் ஆண்டு காவலராக தேர்வு செய்யப்பட்ட அவர், திருச்சி மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார். கே கே நகர் பகுதியில் உள்ள காவலர்கள் குடியிருப்பில் வசித்து வந்த அவர், செவ்வாய்க்கிழமை இரவு, விஷம் உட்கொண்டு மயங்கிய நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இரவே அவரது நிலை மோசமாகியுள்ளது. இந்நிலையில் அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து கே. கே. நகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறை மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், வேறு சமூகத்தைச் சேர்ந்த சக பணியாளர் ஒருவருடன் கௌசல்யாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும்  திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். பின்னர்,  கௌசல்யா வீட்டில் சென்று பெண் கேட்டபோது அவரது பெற்றோர் மறுத்துவிட்டனாராம். எனவே அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறு பெண்ணை திருமணம் செய்துசென்றுவிட்டாராம். இதனால் விரக்தியிலிருந்த கௌசல்யா தற்கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டோக்கியோவில் பிரதமர் மோடி!

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கடகத்துக்கு யோகம்.. தினப்பலன்கள்!

சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT