முதல்வருடன் தலைமைச் செயலாளர் இன்று மாலை சந்திப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.
கரோனா தொற்று பரவல் குறித்து பிரதமர் மோடியுடன் தலைமைச் செயலாளர் இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் இன்று மாலை முதல்வரை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதை எடுத்துரைக்கவுள்ளார்.
மேலும், தமிழகத்தின் கரோனா பரவல், ஆக்சிஜன் இருப்பு குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடன் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.