'ஆக்சிஜன் உ.பி.க்கு திருப்பி விடப்படுகிறது': மம்தா குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
நாட்டில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா இன்று பேசுகையில்,
மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனை உத்தரப் பிரதேசத்திற்கு திருப்பிவிடப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது.
மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டியதை திருப்பிவிட்டால் ஆக்சிஜனுக்கு நாங்கள் என்ன செய்வது? என கேள்வி எழுப்பியுள்ளார்.