சுஷில் சந்திரா 
தற்போதைய செய்திகள்

மேற்கு வங்க மூத்த அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அலுவலர் ஆலோசனை

கரோனா பரவலுக்கு மத்தியில், மேற்கு வங்க 7, 8ஆம் கட்டத் தேர்தல் நடத்துவது குறித்து மாநில மூத்த அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆலோசனை நடத்தினார்.

ANI

கரோனா பரவலுக்கு மத்தியில், மேற்கு வங்க 7, 8ஆம் கட்டத் தேர்தல் நடத்துவது குறித்து மாநில மூத்த அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.

இதில், 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 2 கட்டத் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய சுஷில் சந்திரா பேசியது,

கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக 6 கட்டத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தேர்தல்களில் வாக்காளர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து வருவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வாக்குச்சாவடிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றார். 

இந்த கூட்டத்தில், தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார், மேற்கு வங்கத்தின் தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், காவல்துறை தலைவர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT