தற்போதைய செய்திகள்

ஊரடங்கு: சென்னையில் காவல்துறையினர் தீவிர சோதனை

DIN

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் காவல்துறையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து கடந்த  ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஆண்டில் தமிழகத்தில் முதல் நாளாக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று இரவு 10 மணி முதல் இரவு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், சென்னை முழுவதும் உள்ள அனைத்து மேம்பாலங்களையும் மூடி, பிரதான சாலைகளில் 2 கி.மீ இடைவெளியில் ஒரு சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அடையாள அட்டையை காண்பித்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. திருமணங்களுக்கு செல்வோர் அழைப்பிதழை காண்பித்து செல்கின்றனர்.

ஊரடங்கால் மூடப்பட்டிருக்கும் சென்னை விமான நிலைய மேம்பாலம்

இதுதவிர, தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. 

முழு ஊரடங்கை அடுத்து சென்னையில் உள்ள பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. முன்களப் பணியாளர்கள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றன.

வாகனங்களின்றி காணப்படும் தாம்பரம் சாலை

இதனிடையே, தமிழகத்தில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் நாளை(ஏப்ரல் 26) முதல் அமலுக்கு வரவிருக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT