முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆளுநருடன் சற்றுநேரத்தில் தலைமைச் செயலாளர் சந்திப்பு: புதிய அறிவிப்பு வெளியாகும்?

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் இன்று மாலை தலைமைச் செயலாளர் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
பகிர்:

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் இன்று மாலை தலைமைச் செயலாளர் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாளுக்கு நாள் கரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் வரும் மே 1, 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்க பரிசீலனை செய்யும்படி உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், இரண்டு நாள்கள் ஊரடங்கு ஆகியவை குறித்து தமிழக ஆளுநரை சந்தித்து இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனையின் போது, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை தலைவர் திரிபாதி உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.

மே 2ஆம் தேதி வாக்கெண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →