தற்போதைய செய்திகள்

தடுப்பூசி விலையை நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்கமுடியாது: உச்சநீதிமன்றம்

DIN

கரோனா தடுப்பூசியின் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியது,

நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசியின் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது. தனியார் நிறுவனங்கள் நிர்ணயம் செய்தால் விலை எப்படி ஒரே மாதிரியாக இருக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி விநியோகத்தின் கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும். 

சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் ஆக்ஸிஜன் உதவிகள் கேட்பதை மாநில அரசுகள் தடுக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT