தில்லி விவசாயிகள் போராட்டம்: 510 காவலர்கள் காயம் 
தற்போதைய செய்திகள்

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் 510 காவலர்கள் காயம்: காவல்துறை ஆணையர்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 510 காவலர்கள் காயமடைந்துள்ளதாக தில்லி காவல்துறை ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ANI

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 510 காவலர்கள் காயமடைந்துள்ளதாக தில்லி காவல்துறை ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் 11 கட்டமாக பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் தடுப்புகளை மீறி தில்லிக்குள் விவசாயிகள் நுழைந்த நிலையில் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இதனால் தில்லி எல்லை வன்முறைகளமாக காட்சியளித்தது.

இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் டிராக்டர் பேரணியின் போது விவசாயிகளுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக 510 காவலர்கள் காயமடைந்ததாக தில்லி காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT