நாட்டில் 41.20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை
நாட்டில் இதுவரை 41.20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 41.20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கின. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 1,70,585 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
நாடு முழுவதும் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணிநேரத்தில் 1,70,585 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து இன்று மாலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 41,20,741 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 4,63,793 பேருக்கு, ராஜஸ்தானில் 3,38,960 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் இதுவரை 1,20,745 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.