நாளை(பிப்.3) கேரளம் செல்கிறார் நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இரண்டு நாள்கள் பயணமாக நாளை(பிப்.3) கேரளம் செல்கிறார்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இரண்டு நாள்கள் பயணமாக நாளை(பிப்.3) கேரளம் செல்கிறார்.
கேரளம், தமிழகம், புதுவை உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் தொடர்ச்சியாக இரு முறை தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் பல கூட்டங்களில் பங்கேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஈடுபட்டார்.
இதையடுத்து கேரளத்திற்கு இரண்டு நாள் பயணமாக நாளை செல்கிறார்.