தற்போதைய செய்திகள்

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 11 நீதித்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

ANI

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 11 நீதித்துறை அதிகாரிகளை, நீதிபதிகளாக பதவி உயர்த்துவதற்கு உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

அலகபாத் உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை அதிகாரிகளாக பணிபுரிந்து வரும் மொஹமத். அஸ்லம், அனில் குமார் குப்தா, அனில் குமார் ஓஜா, சாத்னா ராணி (தாகூர்), ஓம் பிரகாஷ் திரிபாதி, நவீன் ஸ்ரீவஸ்தவா, உமேஷ் சந்திர சர்மா, சையத் அப்தாப் ஹுசைன் ரிஸ்வி, அஜய் தியாகி, சையத் வைஸ் மியான் மற்றும் அஜய் குமார் ஸ்ரீவாஸ்தவா ஆகிய 11 பேரை நீதிபதிகளாக பணி உயர்த்துவதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ஆதித்யா சோந்தியை நீதிபதியாக பதவி உயர்த்துவதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின்நீதித்துறை அதிகாரிகளாக பணிபுரிந்து வரும் கேசாங் டோமா பூட்டியா, ரவீந்திரநாத் சமந்தா, சுகடோ மஜும்தார், அனன்ய பாண்டியோபாத்யாய், ராய் சட்டோபாத்யாய், பிவாஸ் பட்டநாயக், சுபேண்டு சமந்தா, மற்றும் ஆனந்த குமார் முகர்ஜி ஆகியோரை நீதிபதிகளாக பணி உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நரேந்திர குமார் வியாஸ் மற்றும் நீதித்துறை அதிகாரி நரேஷ் குமார் சந்திரவன்ஷி ஆகியோரை நீதிபதிகளாக பதவி உயர்த்துவதற்கான திட்டத்திற்கும் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு அழுத்தம்

வட இந்தியாவில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மாசு நுண் துகள்கள்: ஜோத்பூா் ஐஐடி ஆய்வு

காவிரி ஆணைய தீா்மான நகல் எரிப்பு போராட்டம்

பாஜக நாகரிக அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி

ஜிப்மா் புறநோயாளிகள் நாளை இயங்காது

SCROLL FOR NEXT