தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் நாளை(பிப்.6) சாலை மறியல்

ANI

நாடு முழுவதும் நாளை(பிப்.6) தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் விவசாயிகளின் சாலை மறியல் நடைபெறும் என்று தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தில்லியில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசுடனான 11 கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது.

இதையடுத்து தில்லி எல்லைகளில் இரும்பு வேலி அமைத்து தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்புப் பணிகளை தில்லி காவல்துறையினர் செய்துள்ளனர். 

இந்நிலையில் அடுத்தக்கட்டப் போராட்டமாக பிப்ரவரி 6ஆம் தேதி நாடு முழுவதும் சாலை மறியலை அறிவித்துள்ளனர்.

இதுதொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவா்கள் வெல்ளிக்கிழமை கூறியது:

தில்லியில் போரட்டக் களங்களுக்கு அருகே உள்ள பகுதிகளில் இணைய சேவை நிறுத்தப்பட்டது, விவசாயிகளுக்கு எதிரான அதிகாரிகளின் அத்துமீறல் ஆகியவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பிப்ரவரி 6-ஆம் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் விவசாயிகளின் மறியல் போராட்டம் நடைபெறும். பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறும்.

மேலும், இந்த போராட்டத்தின் போது ஆம்புலன்ஸ் போன்ற அவசர சேவை, பள்ளி வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் நிறுத்தப்படாது என தெரிவித்துள்ளனர்.

இதனிடயே, தில்லி சுற்றுப்பகுதிகளில் உள்ள சாலைகளில் போராட்டம் நடைபெறாது எனவும், எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிகள் தவிர பிற சாலைகள் திறந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT