முகப்பு
தற்போதைய செய்திகள்

‘இந்தியாவை பெருமைப்படுத்திய விஞ்ஞானிகளுக்கு நன்றி’: மக்களவைத் தலைவர்

கரோனா தடுப்பூசிகளை தயாரித்து உலகளவில் இந்தியாவை பெருமைப்படுத்திய விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா(கோப்புப்படம்)
பகிர்:

கரோனா தடுப்பூசிகளை தயாரித்து உலகளவில் இந்தியாவை பெருமைப்படுத்திய விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவைக் கூட்டம் தொடங்கியது.

அதில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பேசுகையில்,

கரோனா தடுப்பூசியை குறுகிய காலத்தில் தயாரித்து இந்தியாவை உலகளவில் பெருமைப்படுத்திய விஞ்ஞானிகளுக்கு நன்றி கூற விரும்புகிறேன். எதிர்காலத்தில் தொடர்ந்து அவர்களது பணிகளை செய்வார்கள் என்று நம்புகிறேன் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.