பிப்.18-ல் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை
தமிழக பாஜக சட்டப்பேரவை தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் பிப்ரவரி 18ஆம் தேதி ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
தற்போதைய செய்திகள்பிப்.18-ல் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை
தமிழக பாஜக சட்டப்பேரவை தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் பிப்ரவரி 18ஆம் தேதி ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
தமிழக பாஜக சட்டப்பேரவை தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் பிப்ரவரி 18ஆம் தேதி ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
தமிழகம், கேரளம், புதுவை, மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், தமிழக தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி மற்றும் வி.கே.சிங் ஆகியோர் தமிழக நிர்வாகிகளுடன் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து பாஜகவின் மாநில மையக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.