காங்கிரஸ் - இடதுசாரிகள் இன்று ஆலோசனை 
தற்போதைய செய்திகள்

மேற்குவங்க தேர்தல்: காங்கிரஸ் - இடதுசாரிகள் இன்று ஆலோசனை

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் இணைந்து போட்டியிடவிருக்கும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தொகுதி பங்கீடு குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர். 

ANI

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் இணைந்து போட்டியிடவிருக்கும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தொகுதி பங்கீடு குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர். 

294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அத்தோ்தலில் மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணா்கள் கணித்துள்ளனா். தோ்தலில் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளதாக இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸும் அறிவித்துள்ளன.

இத்தகைய சூழலில், தோ்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிப் பங்கீடு தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஜனவரி மாதத் தொடக்கம் முதல் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட நிலையில் முதற்கட்டமாக 193 தொகுதிகளுக்கான பங்கீடு கடந்த மாத இறுதியில் முடிவடைந்தது.

அதில் இடதுசாரிகள் 101 தொகுதிகளிலும் காங்கிரஸ் 92 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன. 

மீதமுள்ள 101 தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வது தொடா்பாக அடுத்தக் கட்ட ஆலோசனையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை சேர்ந்த தலைவர்கள் இன்று ஈடுபடவுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் அவை தனித்தனியாகப் போட்டியிட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொலைக்காட்சியிலும் வெளியாகும் மாமன்!

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

மேட்டூர் அணை நிலவரம்!

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

SCROLL FOR NEXT