தற்போதைய செய்திகள்

கேரளத்திலிருந்து புணே வருபவர்களுக்கு கரோனா சான்று கட்டாயம்

ANI

கேரள மாநிலத்திலிருந்து புணே வருபவர்களுக்கு கரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவதாக புணே மாநகராட்சி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்றின் பரவல் குறைந்து வரும் நிலையில், கேரளத்தில் மட்டும் நாள்தோறும் சுமார் 5,000 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டு வருகிறது.

இதனையடுத்து புணே மாநகராட்சி பகுதியில் கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கேரள பயணிகள் புணே வருவதற்கு முன்பு பரிசோதனை செய்து கரோனா இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன், கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடக அரசு இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT