தற்போதைய செய்திகள்

‘எங்கள் போராட்டம் பலவீனமடையாது’: விவசாய சங்கத் தலைவர்

ANI

எங்கள் போராட்டம் பலவீனம் அடையாது என விவசாயசங்கத் தலைவர் ராகேஷ் திக்காயத் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடந்த நவம்பர் 26 முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாய பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதனால், விவசாயிகளின் போராட்டம் நவம்பர் தொடங்கி தொடர்ந்து நீடித்து வருகிறது.

போராட்டம் குறித்து  ராகேஷ் திக்காயத் கூறுகையில்,

மத்திய அரசு விழித்துக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது, ஆனால் நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம். விவசாயிகள் கடந்த 70 ஆண்டுகளாக நஷ்டத்தில் தான் விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது விளைந்துள்ள பயிர்களை தியாகம் செய்ய வேண்டுமானால், அவர்கள் அதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். பயிர்களை அறுவடை செய்ய அதிக தொழிலாளர்கள் தேவைப்படுமானால், அவர்கள் அதையும் செய்வார்கள். விளைந்த பயிர்களை அறுவடை செய்து தங்கள் வீட்டில் வைத்துக் கொள்வார்களே தவிர எங்கள் போராட்டம் பலவீனமடையாது எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT