தில்லியில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 220 பேர் பாதிப்பு
தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 220 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 220 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,38,593 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 188 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், ஒருவர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,26,519 பேர் குணமடைந்துள்ளனர். 10,905 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் 1,169 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.