முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய எல்லைகுள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தான் சிறுவன்

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானை சேர்ந்த 14 வயது சிறுவன் தவறுதலாக நுழைந்ததாக எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On : 1 ஜனவரி, 2021 at 5:56 PM
கோப்புப்படம்
பகிர்:

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானை சேர்ந்த 14 வயது சிறுவன் தவறுதலாக நுழைந்ததாக எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர் அலி ஹைதர்(வயது 14). இந்த சிறுவன் வெள்ளிக்கிழமை காலை இந்திய எல்லையான பூஞ்சில் உள்ள அஜோட் கிராமத்திற்கு அருகே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.

புஞ்ச் பாதுகாப்பு படையின் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த சிறுவனிடன் நடத்தப்பட்ட விசாரணையில், தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும், அந்த சிறுவனை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பூஞ்ச் பாதுகாப்பு படை அதிகாரி ரமேஷ் அங்க்ரல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.