தற்போதைய செய்திகள்

‘சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை’: கேரள முதல்வர்

ANI

கேரள மாநிலத்தில் சுகாதார ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நாளை நடக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் கேரள முதல்வர் பேசியதாவது,

மத்திய அரசு அளித்த தகவலின்படி, கரோனா தடுப்பூசி போடும் பணி இந்த மாதத்திலேயே தொடங்கப்படும். கேரளத்தில் தடுப்பூசி கிடைத்தவுடன், சுகாதார ஊழியர்களுக்கு முன்னிரிமை அடிப்படையில் முதலில் போடப்படும். தடுப்பூசியை விநியோகிக்க கேரள அரசு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஊரடங்கு தளர்வு பற்றி பேசியதாவது,

ஜனவரி 5ஆம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும். மேலும், குறைந்த அளவிலான பக்தர்களை கொண்டு வழிபாட்டுத் தலங்களில் பண்டிகைகளை கொண்டாட அனுமதி அளிக்கப்படுகிறது எனக் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT