தற்போதைய செய்திகள்

கேரளத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

DIN

கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு கேரளத்தில் வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்ப் பரவலால் கடந்த 2019 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டது. இந்நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில், ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களை மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்க வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 300க்கும் அதிகமானோர் இருக்கும் பள்ளிகளில் 25 சதவீத மாணவர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும்.

பள்ளி நேரமானது, காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை மற்றும் மதியம் 1.15 மணிமுதல் மாலை 5.15 மணிவரை என இரண்டு பிரிவுகளாக பிரித்து நடத்த வேண்டும் என அறிவித்துள்ளனர்.

மேலும், ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 17 முதல் கரோனா நெறிமுறைகளை பின்பற்றி பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT