தற்போதைய செய்திகள்

செம்பரம்பாக்கத்தில் நீர் திறப்பு: வினாடிக்கு 3,307 கனஅடியாக அதிகரிப்பு

DIN

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கும் தண்ணீரானது, வினாடிக்கு 3,307 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பருவ மழை காரணமாக நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகின்றது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23 அடி, புழல் ஏரியின் நீர் மட்டம் 21 அடியை எட்டியதையடுத்து முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 1 மணிக்கு நீர் திறக்கப்படும் என அறிவித்தனர்.

இதனையடுத்து, செம்பரம்பாக்கத்தில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து தற்போது 3,307 கனஅடியாக அதிகரித்துள்ளனர்.

இதனால் அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT