தற்போதைய செய்திகள்

‘விரைவில் பள்ளிகள் திறக்கப்படும்’: தில்லி கல்வித்துறை அமைச்சர்

ANI

தில்லியில் உள்ள பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என்று மாநில துணை முதல்வரும், கல்வித்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கரோனா பரவல் குறைந்ததையடுத்து பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

தில்லியில் பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் மணீஷ் கூறியதாவது,

முன்னணி களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னர் சாதாரண மக்களுக்கு தடுப்பூசி எவ்வளவு சீக்கிரம் கிடைக்கிறது என்பதை பொறுத்து தான் எங்களின் எதிர்கால திட்டங்கள் இருக்கும்.

சிபிஎஸ்சி தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT