முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹரியாணா: ஒரு மாதத்தில் 4 லட்சம் கோழிகள் பலி

ஹரியாணா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் பலியாகியுள்ளதாக மாநில கால்நடைத்துறை அமைச்சர் ஜே.பி. தலால் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
கோப்புப்படம்
பகிர்:

ஹரியாணா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் பலியாகியுள்ளதாக மாநில கால்நடைத்துறை அமைச்சர் ஜே.பி. தலால் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், கேரளம், ஹரியாணா, உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பறவைக் காய்ச்சல் தொற்று நோயால் பறவைகள் பலியாகி வருகின்றன.

இந்நிலையில், ஹரியாணாவில் கடந்த சில நாள்களாக லட்சக்கணக்கான கோழிகள் பலியாகி வருகின்றது.

இதுகுறித்து மாநில கால்நடைத்துறை அமைச்சர் கூறியதாவது,

ஒரு மாதத்திற்குள் 4 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் பலியாகியுள்ளன. உயிரிழந்த கோழிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பட்டுள்ளது. அதில், 2 பண்ணைகளில் இறந்த கோழிகளுக்கு எச் 5 என் 8 என்கின்ற பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →